என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்ளையர்கள் கைது"
சிவகங்கையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி காளையார் கோவில் பகுதியில் பணம் வசூல்செய்து விட்டு கருப்புராஜா (28) என்பவருடன் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிவந்தார்.
அவர்கள் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டனி பட்டி அருகில் வரும்போது ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.50ஆயிரம், தங்க நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் கண்ணன், ஸ்ரீராஜ் கண்ணன், நாகபிரபு, கார்மேக கண்ணன் உள்ளிட்டவர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவகங்கை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் உதவியுடன் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பரமக்குடி, முத்தாலம்மன் கோவில் படித்துரையை சேர்ந்த, முத்துராசு தூக்குதுரை (வயது24), திருப்பத்தூரை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மவுன்டன் என்ற மலைச்சாமி (28), மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ஏ.கோவில்பட்டியை சேர்ந்த சத்யபிரபு (26), காளையார்கோவிலை அடுத்த கிழக்கு ஒத்தவீடுபகுதியை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இருசக்கர வாகனம், ஆயுதம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனா (வயது 20). நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வடமாநில வாலிபர்கள் பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். அந்த நேரத்தில் 2 பேரும் மீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட் டார் சைக்கிளில் தப்பினர்.
தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சிவநாகஜோதி (36). நேற்று குறிஞ்சி நகரில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சிவநாகஜோதியை வழிமறித்து அவரது கழுத் தில் இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
2 நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள கொடிமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன். இவரது மனைவி மூக்கம்மாள் (92). இவர் நேற்று மாலை தனது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மூக்கம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துத் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (22), ஜெய்ஹிந்துபுரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த நகை பறிப்பு சம்பவங்களில் இவர்கள் 2 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாசர்பாடி, பெரம்பூர், எம்.கே.பி.நகர், சர்மாநகர், சாஸ்திரிநகர் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
இது குறித்து, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரணுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, எம்.கே. பி.நகர் உதவி கமிஷனர் அழகேசன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இரவில் தனிப்படை போலீசார் முல்லை நகர் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது. போலீசார் அதை விரட்டிச் சென்று மடக்கினார்கள்.
அதை ஓட்டிச் சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் பெயர் தீபன் ராஜ். வியாசர்பாடி ஜே.ஜே.நகரை சேர்ந்த இவர் தனது நண்பர்கள் அஜய், காமேஷ், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதும், செல்போன்கள் பறித்ததும் தெரிய வந்தது.
அவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட தீபன்ராஜ், அஜய், காமேஷ், அரவிந்த் ஆகியோரை எம்.கே.பி. நகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை புளியந்தோப்பு துணை கமிஷனர் பாராட்டினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலும் தஞ்சை பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி, ரெயில் நிலையம், எம்.கே.மூப்பனார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அந்த வழியாக வரும் பொதுமக்களை சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மிரட்டி, தாக்கி அவர்களிடம் இருந்த பணம், செல்போனை பறித்து சென்று வந்தனர்.
இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜகோ பால், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் தனிப்படையை சேர்ந்த போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வழிப்பறி போன்ற அட்டூழிய செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உலா வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில் தஞ்சை மேலவீதியை சேர்ந்த எலி என்ற முருகானந்தம், மேல அலங்கத்தை சேர்ந்த ராமு என்ற லெப்ட்ராமு, கோடி என்ற குமரேசன், கோபி, வடக்கு வாசலை சேர்ந்த சீனிவாசன், அதே பகுதி ருக்மணி அம்மன் மடம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தான் பொதுமக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 48). இவர் ஜெய்பாவாய் மாநகராட்சி பள்ளியில் ஓவிய ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை இவர் குத்தூஸ்புரம் அருகே மொபட்டில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வளர்மதியிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை பறிப்பு நபர்களை போலீசார் தேடி வந்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் வாகன தணிக்கையின் போது 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (44), நல்லூரை சேர்ந்த பார்த்தீபன் (40) என்பதும், இவர்கள் தான், ஆசிரியை வளர்மதியிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பூர் ஊரகம், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தலா 2 நகை பறிப்பு வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 30 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரமேஷ், பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் சுவாதி. வங்கி ஊழியரான இவர் வீட்டில் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் டிவி. உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார் (22), லிங்குசெட்டி தெருவை சேர்ந்த அடில்மாசன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு டி.வியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை பரங்கிமலை பட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஜ்குமார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது தந்தையுடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கிண்டி கத்திப்பாரா பாலம் அருகே போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் பகுதியில் சென்ற போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில் மிரட்டி காரில் இருந்த 2 சூட்கேஸ்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஹரிஜ்குமார் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பரங்கிமலை துணை கமிஷனர் முத்துஅலி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்தி வியாசர்பாடியை சேர்ந்த ரத்னம், ஜெகதீஸ்வரன் அபினேஷ், டில்லிபாபு, பிரகாஷ், சரவணன், திருவொற்றியூர் லியோ, அண்ணாநகர் லாரன்ஸ் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வியாசர்பாடி பகுதியில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு துணை கமிஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர்களான மோகன், மாணிக்கம் ஆகியோர் கடந்த மாதம் 23-ந்தேதி காரில் கடத்தப்பட்டனர்.
2 பேரையும் கத்திமுனையில் மிரட்டி பங்களாவில் அடைத்து வைத்த கும்பல் ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 பவுன் நகைகளை பறித்தது.
இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடபழனி உதவி கமிஷனர் சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பசுபதி, மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கடத்தல் வழக்கின் குற்றவாளிகளான செல்லப்பாண்டி, சுதீர்குமார், நந்த குமார், சேக்தாவூத், சீனிவாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன், வினோத் ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டிலும், சரவணகுமார் அம்பத்தூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது 3 பேரிடமிருந்தும் ரூ.28 லட்சம் பணம், 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. #Tamilnews
சோழவரத்தை அடுத்த எடப்பாளையம், பழைய விமான நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரத்தில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்கள் சென்னையை சேர்ந்த சிவா, தினேஷ், ஆனந்த் குமார், விஜயகுமார், விஜய் என்பது தெரிய வந்தது.
சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்